Cinema News


தமன்னா அவதார் ஹலிவூட் படத்தில் நடிக்கிறாராம்!!




வசூலில் உலக சாதனை படைத்த ஹாலிவூட் காவியமான அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயாராகி விட்டார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். வேற்றுகிரக வளங்களை ஆக்கிரமிக்க முயலும் பூமி மனிதர்களின் கதையாக முதல் பாகம் இருந்தது.

இரண்டாம் பாகம் இந்தியாவை மையமாகக்கொண்ட கதை. நமது ஆன்மீக விஷயங்களை கலவையாக இதில் பயன்படுத்துகிறார் கேமரூன். எனவே இந்திய முகம் கொண்ட ஹீரோயினை தேடி அலசிய அவர், முப்பையில் வந்து தங்கி பலரையும் பார்த்து திருப்தி அடையாத மனநிலையில் இருந்தார். ஹோட்டல் அறையில் இருந்த டிவி யில் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அயன் படத்து பாடல் காட்சியைப்பார்த்ததும் தமன்னா தான் தனது ஹீரோயின் என்று முடிவு செய்துவிட்டார்.

கையோடு தமன்னாவை அமெரிக்கா கூட்டிப் போய், அவதார் மேக்கப் போட்டு திருப்தியாகி, அக்ரிமேண்டும் போட்டாச்சு. அந்த மேக்கப்பில் தமன்னா இருக்கும் போட்டோ தான் இது.








ஸ்ருதியுடன் தனியாக வந்த தனுஷ் !ஐஸ்வர்யாவால் வெளியேற்றம்?.....


பெரிய இடத்து மருமகனுக்கு சங்கீதம் தெரிஞ்சளவுக்கு இங்கீதம் தெரியலையே என்று என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.
(சங்கீதம்னா வொய் திஸ் கொலவெறி பாஸ்.

அவசரப்பட்டு ஆரோகனம், அவரோகனத்துக்கெல்லாம் போயிராதீங்க) அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். இப்பதான் லேசாக வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது விஷயம். ஹலோ… விஷயத்துக்கு வாப்பா என்கிறீர்களா? பொறுமை ப்ளீஸ்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு எப்.எம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட வானொலி நிலையத்துக்கு போயிருந்தார் தனுஷ். அங்கு நடந்த அக்லி மேட்டர்தான் இப்போது கொழுந்துவிட்டு எரிந்து கோக்குமாக்கு விவகாரம் ஆகியிருக்கிறது.
வரும்போதே ஸ்ருதியுடன் மட்டும்தான் வந்தாராம் தனுஷ். அது 3 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி. சிறிது நேரம் கழித்து வந்து சேர்ந்திருக்கிறார் அனிருத். மூவரும் உட்கார்ந்து படத்தை பற்றி அலசிக் கொண்டிருந்தார்களாம் தொகுப்பாளருடன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய டைரக்டர் ஐஸ்வர்யாவுக்கு தகவலே சொல்லப்படவில்லை. ஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட ஐஸ்வர்யா யாரும் அழைக்காமலே அங்கு வந்து நிற்க, முதலில் அதிர்ந்தவர் தனுஷ்தானாம்.
முகமெல்லாம் சிவந்து போனவர், ‘இதோ ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வர்றேன்’ என கூறிவிட்டு எழுந்து போயிருக்கிறார். அவர் திரும்பி வருவார் என்று தொகுப்பாளரும், மற்றவர்களும் காத்திருக்க கீழே இறங்கி வந்த தனுஷ் அப்படியே கார் ஏறி வீட்டுக்கு போய் விட்டார்.
அவரது கோபம் யார் மீது என்று புரியாமல் தவித்த எப்எம், ஒரு செரிக்காத ஏப்பத்தோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டது.










ராத்திரி பதினொரு மணிக்கு வாங்க...
தனுஷும் தெனாவெட்டும்...
விருந்துக்கு அழைச்சிட்டு முதுகுக்கு பின்னாடி இலையை போட்டா எப்படியிருக்கும்? அப்படியொரு எரிச்சலில் இருக்கிறது பத்திரிகையாளர் வட்டாரம். இலை போட்ட மவராசன் நம்ம தனுஷ்தான்.
இன்றைக்கு வெளியாகிறது 3 திரைப்படம். கொலவெறி பாட்டு வெளியான நாளில் Dhanushஇருந்தே இப்படத்திற்கும் பாட்டுக்கும் கஞ்சி தடவி போஸ்டர் ஒட்டாத குறையாக பப்ளிசிடி கொடுத்து வருகிறார்கள் பிரஸ் பிரதர்ஸ். நடுவில் ஒருமுறை அழைத்து தேங்ஸ்... என்றார் தனுஷ். நல்ல பழக்கம். அடிக்கடி ஃபாலோ பண்ணுங்க என்று ஆசிர்வதித்துவிட்டு வந்த பிரஸ்சுக்கு நேற்று வந்த தகவல் பொட்டில் விழுந்த ஷட்டில் பால்!
ராத்திரி பதினொரு மணிக்கு படம் போட்ருக்கோம். வந்து பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க என்பதுதான் அது. (மிட் நைட்ல போடுறதுக்கு இது என்ன மிட் நைட் மசாலாங்களா?) பொதுவாக குடும்பம், குழந்தை குட்டின்னு அத்தனையையும் சமாளிக்க வேண்டிய அப்பன்காரன்களாகதான் இருக்கிறார்கள் பெரும்பாலான பிரஸ்காரர்கள். நேரம் காலம் தெரியாத பிழைப்பாச்சே.
ஏதோ பேச்சுலர்களை பார்ட்டிக்கு அழைப்பதை போல பதினொரு மணிக்கு படம் பார்க்க அழைக்கும் தனுஷின் தெனாவட்டு சிம்புவின் தெனாவட்டுக்கு சற்றும் குறையாமலிருக்கிறதே என்று குமுறித் தள்ளுகிறார்கள்.
'பார்த்தா பார்கட்டும், பார்க்காட்டி போகட்டும். இவங்களை நம்பியா நம்ம புகழ் இருக்கு' என்கிறாராம் தனுஷ். வரிக்குதிரைக்கே வெள்ளையடிக்கிற ஜாதிதான் பிரஸ். அது முகத்திலேயே வெள்ளை வெளேர்னு விபூதி பூசுறீங்களே தனுஷ்?காதலுக்கு தேவை இதயமா, மூளையா?
அலசி ஆராயும் சிம்பு
காதலுக்கு இதயம் முக்கியமா வேணும். ஆனா இப்ப வர்ற காதலுக்கெல்லாம் இதயம் அவசியமான்னு தெரியல. ஆனா மூளை ரொம்ப முக்கியம். Simbuகால்குலேஷனோடதான் காதலிக்கிறாங்க எல்லாரும். ஒரு தொலைக்காட்சியில் இப்படி குமுறி குமுறி பேட்டியளித்திருக்கிறார் சிம்பு.
இப்படி ஒரு 'வீரவணக்க' உரையை அவர் ஆற்றியதற்கு பின்னாலிருக்கும் வலி ஊருக்கே தெரிந்த கிலி. அதனால் இதை குறை சொல்லவும் முடியாது. இரையான மீனுக்குதானே இரைப்பையோட ஸ்பீடு தெரியும்!?
போகட்டும்... அதற்கு பிறகு அவர் பேசியதுதான் டோன்ட்கேர் சமாச்சாரம். என்னைய பற்றி தப்பு தப்பா எழுதறாங்க. ட்விட்டர்ல நியூஸ் போடுறாங்க. அவங்களுக்கெல்லாம் இத தவிர வேற வேலையே இருக்காதுன்னு நினைக்கிறேன். அவங்கள்ளாம் எழுதறாங்கன்னு நான் ஃபீல் பண்ணவே மாட்டேன். இப்படி எழுதறதால யாராவது என்னை வச்சு படம் பண்ணாம இருக்காங்களா? அல்லது நான்தான் சம்பாதிக்காம இருக்கேனா? கோடி கோடியா சம்பாதிக்கிறேன். ஹேப்பியா இருக்கேன். எழுதறவங்க எழுதட்டும். நான் இப்ப இருக்கிற மாதிரிதான் எப்பவும் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
தன்மான சிங்கத்தின் வாரிசல்லவா? இருமுனாலும் கர்ஜனைதான், உறுமுனாலும் கர்ஜனைதான்.பரதேசி வந்த கதை
பாலாவும் டைட்டிலும்
டைரக்டர் பாலாவை பொறுத்தவரை பேச்சும் பார்வையும் கூட ஸ்ரெயிட்தான். கத்தி ஒன்று, கட்டிங் ரெண்டு என்றே பேசுவார். அது சரியா, தப்பா என்பதெல்லாம் அவருக்கு Balaஅவசியமில்லாத ஒன்று. தற்போது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்கு எரிதணல் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் பளிச்சென்று தனது பட டைட்டிலை அறிவித்திருக்கிறார் அவர். பரதேசியாம்.
பரதேசி என்ற தலைப்பு அவருக்கு எப்படி தோன்றியது. ஏன் தோன்றியது என்பதையெல்லாம் யோசிக்க தேவையில்லை. கதைக்கு நெருக்கமாகதான் இருக்கும் அவர் வைக்கும் தலைப்புகளும். இந்த பரதேசிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இதைதான் இந்த நேரத்தில் சொல்லத் தோன்றுகிறது நமக்கு.
ஒரு முறை அவருக்கு சால்வை அணிவித்தார்கள் சில பத்திரிகையாளர்கள். அது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. அங்குதான் நடந்தது இந்த மரியாதைக்குரிய விஷயமும். சால்வையை ஏற்றுக் கொண்ட பாலா என்ன சொன்னார் தெரியுமா? இந்த சால்வையை எனக்கு போர்த்தியதற்கு பதிலா ஒரு பரதேசிக்கு போர்த்தியிருந்தா அவருக்காவது உதவியிருக்கும்.
பாலாவின் மனசில் பரதேசிக்கும் ஒரு இடம் இருக்கிறதய்யா...போட்டி பொறாமை புர்ர்ர்ர்
விமல்-சிவகார்த்திகேயன் உர்ர்ர்
கரும்பு இருக்கிற இடத்திலெல்லாம் எறும்பும் இருப்பது மாதிரி, போட்டி இருக்கிற இடத்திலெல்லாம் பொறாமையும் தலை விரித்து ஆடும். அப்படிதான் திடீர் போட்டியாளர்களாகி நிற்கிறார்கள் விமலும், நேற்று வந்த Siva karthikeyanசிவ கார்த்திகேயனும். (அந்த விஷயத்தில் விமல் கூட முந்தா நாள் வந்தவர்தான். பெரிய டிபரென்ஸ் இல்லை) இருந்தாலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி விமலை விம்ம வைத்திருப்பதாக ஊரெங்கும் ஒரே பேச்சு.
என்னாத்துக்காம்? விமலை பொறுத்தவரை அவரது கால்ஷீட் நிலவரம், கேஸ் சிலிண்டருக்கு ஏற்பட்டுள்ள திடீர் பற்றாக்குறை போலாகியிருக்கிறது. மாதத்திற்கு முப்பதே நாட்கள்தான் என்ற உண்மை புரியாமல் அறுபது எழுபது நாட்களுக்கும் சேர்த்து ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். யார் தயாரிப்பாளர், யார் டைரக்டர் என்றெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கால்ஷீட் கொடுக்க முன்வந்ததன் விளைவு கைவசம் சுமார் ஏழு படங்கள் இருக்கிறது இப்போது. இந்த லட்சணத்தில் வாய்மொழியாக கொடுத்திருக்கிற உறுதிமொழி வேறு ஏகப்பட்ட இயக்குனர்களை இவர் பின்னால் சுற்ற வைத்திருக்கிறது.
சுற்றி சுற்றி அலைந்தவர்களில் பலர் சிவ கார்த்திகேயனை சரணடைகிறார்களாம். வேடிக்கை என்னவென்றால் ஜெய் கேட்ட சம்பளம் பொறுக்காமல் தனது கம்பெனி தயாரிக்கும் படத்தில் விமலை ஒப்பந்தம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் கூட கால்ஷீட் குழப்பம் காரணமாக விமலை நீக்கிவிட்டு சிவ கார்த்திகேயனை ஒப்பந்தம் செய்துவிட்டார்.
இந்த திடீர் நீக்கம்தான் விமலை அதிர வைத்திருக்கிறது. அன்றிலிருந்து சிவா பெயரை கேட்டாலே சிவ சிவா என்று காதை பொத்திக் கொள்கிறாராம் விமல்.மீண்டும் சொந்தப்படம்
டைரக்டர் ஷங்கர் முடிவு
பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கூட பரவாயில்லை. 'குண்டு' விழுந்தால் என்னாவது? அப்படி ஒரு அதிர்ச்சியான குண்டடிக்கு ஆளாகி தனது அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்தான் பிரபல இயக்குனர் ஷங்கர். வெயில், ஈரம் தவிர இவர் தயாரித்த மற்ற படங்கள் எல்லாமே ஷங்கரின் உள் பாக்கெட்டையும் சேர்த்து காலி பண்ணியது.
அதிலும் பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் Shankarபெருத்த பிரச்சனையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த கரகரக் குரல்காரர் ஒரு கோடி சம்பளம் கேட்க, நயன்தாராவை டூ பீஸ்ல நடிக்க வச்சாலே இவ்வளவு கேட்க மாட்டாரே என்று குழம்பிப் போனார் ஷங்கர். இருந்தாலும் கேட்பவர் பெரிய மனுஷன். கொடுக்காமலிருந்தால் குரு துரோகத்திற்கு ஒப்பாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் அழுது வைத்தார்.
படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது. அதன்பின் எந்த இயக்குனராவது சொந்தப்படம் எடுக்கிறார் என்று குருவியார் பதில்களில் படிக்க நேர்ந்தால் கூட கண்ணை மூடி 'கடவுளே... அவரை காப்பாற்றுமப்பா காப்பாற்றும்' என்று பலம் கொண்ட மட்டும் ஜெபிக்கிற அளவுக்கு நிலைகுலைந்து போவார்.
இரும்புக்கோட்டையின் கதவை எறும்புகள் தட்டிய மாதிரி அதன்பின் ஷங்கரை தட்டி தட்டி ஓய்ந்து போன புது இயக்குனர்கள் பலர், அந்த தெரு வழியே கூட இப்போது நடப்பதில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு புது இயக்குனர் ஷங்கரிடம் கதை சொல்லி, அவரது பிடிவாதத்தின் மீது கோடாலியை போட்டிருக்கிறார்.
'இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும்' என்று அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நல்ல செய்தியை அறிவிக்க இன்னும் நாலைந்து மாதங்களாவது ஆகும் போல தெரிகிறது.


 ஏ- வை நோக்கி பில்லா 2
அஜீத் பட வியாபாரத்தில் இழுபறி

 எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ் Billa 2 செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக பில்லா-2ஐ உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம்.
ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் 'புதிய தலைமுறை'யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
அப்படிப்பட்டவருக்கு பில்லாவை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில்.