எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்து கடந்த வாரம் நடந்த 'முகமூடி' ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு பிரச்சனை. ஆனால் அது பிரபலங்களால் ஏற்பட்டது அல்ல. ரசிகர்களால்! ஆடியோவை வெளியிட வந்திருந்தது இளைய தளபதி விஜய் ஆச்சே? கூடி கும்மாளமடித்துவிட்டார்கள் ரசிகர்கள். யார் பேச எழுந்தாலும் 'இளைய தளபதி... இளைய தளபதி...' என்று அவர்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்க, எல்லாருடைய பேச்சிலும் வேகத்தடங்கல்! விஜய் பேசி முடித்துவிட்டு வெளியே கிளம்புகிற நேரத்தில் அவர் பின்னாலேயே ஜீவாவின் கோபம் இது என்றால், விஜய்யின் கோபம் வேறு மாதிரி. கூட்டத்தில் மிஷ்கின் பேச வந்தபோதும் இதே போல ரசிகர்கள் குரல் கொடுக்க, 'யப்பா... உங்களுக்கு இளைய தளபதின்னு சொல்லலணும். அவ்வளவுதானே? இதோ கேட்டுக்கங்க. இளைய தளபதி... இளைய தளபதி... இளைய தளபதி... சொல்லிட்டேன். இனிமேலாவது பேச விடுங்கப்பா' என்றார் கோபத்தோடு. தன்னை மேடையில் உட்கார வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் லந்தடிக்கிறாரே என்று மிஷ்கின் மீது பிற்பாடு பொசபொசவானாராம் விஜய். |
Tuesday, 24 July 2012
இளைய தளபதி... இளைய தளபதி... -ஏலம் போட்ட மிஷ்கின்
Wednesday, 18 July 2012
Sunday, 15 July 2012
அஜீத்தை அதிர வைத்த நடிகர் இது ரிட்டையர்மென்ட் ரிவிட்!
அரவிந்த்சாமியும் அஜீத்தும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும்?
அழகான இந்த ஃபார்முலாவின் மீது ஜமுக்காளத்தை போட்டு மூடியிருக்கிறார் அரவிந்த் சாமியோவ்... ஏனாம்?
விஷ்ணுவர்த்தன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையை கேட்டு திருப்தியுற்ற அரவிந்த்சாமி, இந்த கதைக்காக நடிக்கிறேன். அப்படியே சம்பளத்துக்காகவும்தான் என்றாராம். சரி சொல்லுங்க எவ்வளவு? என கேட்ட விஷ்ணுவுக்கு விலா எலும்பே ஸ்கிப் ஆகிற அளவுக்கு சிரிப்பு. வேறொன்றுமில்லை, ரெண்டு கோடி கேட்டாராம் அவர்.
தலை தெறிக்க ஓடிய விஷ்ணு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்ல, ஆணியே புடுங்க வேணாம் என்று கூறிவிட்டார் அவர். இப்போது இருபது லட்ச ரூபாய் சம்பளத்தில் அதுல்குல்கர்னி நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல்லு முளைச்ச சீப்பை கல்லுல வச்சுதான் வாரணும்...
Wednesday, 11 July 2012
Sunday, 8 July 2012
Thursday, 5 July 2012
சமந்தாவும் விலகலும்... 'அது' காரணமில்லையாம்
'அது காரணமில்லை' என்கிறார்கள் சமந்தாவுக்கு சம்மந்தப்பட்டவர்கள். மணிரத்னம்படத்திலிருந்து சமந்தா விலகியதற்கு என்ன காரணம்? மைக்ராஸ்கோப்பையே மல்லாக்க போட்டு ஆராய்ச்சி பண்ணியது கோடம்பாக்கம். இறுதியாக அவர்களுக்கு கிடைத்த விடை, சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி என்பதுதான். இந்த பதிலை இல்லை என்று மறுக்கிறது சமந்தா வட்டாரம்.
கடல் காற்று ஒத்துக் கொள்ளாமல் முகம் உள்ளிட்ட எல்லா இடங்களும் டேமேஜ் ஆகிறது என்பதால்தான் இப்படத்திலிருந்து அவர் விலகியதாக கூறப்பட்டதல்லவா? அதுவல்ல காரணம் என்று அடித்து திருத்திவிட்டு, வேறொரு காரணத்தை முன்மொழிகிறார்கள் சிலர். அது என்னவாம்?
மணிகூண்டையே தூக்கி மடியில கட்டுன மாதிரி பஞ்ச்சுவாலிடி காட்டுவார் மணிரத்னம். அவரோட காம்பவுண்டுக்குள் அப்படியொரு 'ஸ்லோ' என்றால் விடுவாரா? தினம் தினம் லேட்டாக வந்ததால்தான் தனது 'கடல்' படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த சமந்தாவை அனுப்பிவிட்டு ராதா மகள் துளசியை நடிக்க வைத்தாராம்.
இதுக்கப்புறம் தனியா வேறொரு காரணத்தை கண்டுபிடிச்சு தொலைவாங்களோ?
Wednesday, 4 July 2012
கோச்சடையானை அடுத்து துப்பாக்கி? ஜெயா டி.வி அதிரடி பாய்ச்சல்
சில பல களையெடுப்புகளுக்கு பிறகு வேகம் எடுத்துவிட்டது ஜெயா தொலைக்காட்சி.முதல் பாய்ச்சலே பிற சேனல்களை பிரமிக்க வைத்திருக்கிறது. வேறொன்றுமில்லை, ரஜினியின் 'கோச்சடையான்' படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விட்டார்களாம். தொலைக்காட்சி வரலாற்றில் இவ்வளவு பெரும் தொகை வேறெந்த படத்திற்கும் தரப்பட்டதில்லையாம். இந்த அதிரடி செய்தி வெளியே கசிந்து சக சேனல்கள் அதிர்ச்சியில் மூழ்கி நிமிர்வதற்குள் அடுத்த அதிர்ச்சியை வீச தயாராகிவிட்டது ஜெயா டி.வி. விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படத்தின் சேட்டிலைட் உரிமைக்கான பேச்சு வார்த்தை ஆரம்பமாகியிருக்கிறதாம். அநேகமாக இரண்டொரு நாளில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரக்கூடும். அப்படியே ஏராளமான புதுப்படங்களை நோக்கி வலையை வீசுவதால், கோடம்பாக்கத்தின் சந்து பொந்தெல்லாம் செழிப்போ செழிப்பு. |
Sunday, 1 July 2012
Subscribe to:
Posts (Atom)