அரவிந்த்சாமியும் அஜீத்தும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும்?
அழகான இந்த ஃபார்முலாவின் மீது ஜமுக்காளத்தை போட்டு மூடியிருக்கிறார் அரவிந்த் சாமியோவ்... ஏனாம்?
விஷ்ணுவர்த்தன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையை கேட்டு திருப்தியுற்ற அரவிந்த்சாமி, இந்த கதைக்காக நடிக்கிறேன். அப்படியே சம்பளத்துக்காகவும்தான் என்றாராம். சரி சொல்லுங்க எவ்வளவு? என கேட்ட விஷ்ணுவுக்கு விலா எலும்பே ஸ்கிப் ஆகிற அளவுக்கு சிரிப்பு. வேறொன்றுமில்லை, ரெண்டு கோடி கேட்டாராம் அவர்.
தலை தெறிக்க ஓடிய விஷ்ணு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்ல, ஆணியே புடுங்க வேணாம் என்று கூறிவிட்டார் அவர். இப்போது இருபது லட்ச ரூபாய் சம்பளத்தில் அதுல்குல்கர்னி நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல்லு முளைச்ச சீப்பை கல்லுல வச்சுதான் வாரணும்...
No comments:
Post a Comment